Home 13வது பொதுத் தேர்தல் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 பெண் அமைச்சர்கள் – வாக்குகள் எதிர்க்கட்சி கூட்டணிக்கு திரும்புமா?

எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 பெண் அமைச்சர்கள் – வாக்குகள் எதிர்க்கட்சி கூட்டணிக்கு திரும்புமா?

726
0
SHARE
Ad

Zuraidah-PKR-Women-leaderபிப்ரவரி 25 – வரும் பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால் அதன் அமைச்சரவையில் 10 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும்  இதன் மூலம் பெண்களுக்கு 30 விழுக்காடு இடம் ஒதுக்கும் வகையில் பி.கே.ஆர். அமைச்சரவையில் 10 பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும்  என்றும் பி.கே.ஆர். கட்சியின் மகளிர் அணித்தலைவர் ஸூராய்டா கமாருடின் கூறியுள்ளார்.

இந்தியாவில் பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு இட ஓதுக்கீடு நடைமுறையில் உள்ள நிலையில் இந்த  குறிப்பிடத்தக்க அறிவிப்பு பெண்களுக்கு அக்கட்சியின்பால் நிச்சயம் ஈர்ப்பை ஏற்படுத்தும் என்பதோடு, அவை வாக்குகளாக மாறும் சாத்தியக்கூறுகளையும் மறுப்பதற்கில்லை.

அமைச்சரவை மட்டுமன்றி அமைச்சிலுள்ள 33 முக்கிய பதவிகள். நாடாளுமன்றம், வாரிய இயக்குனர் போன்ற அனைத்து பதவிகளிலும் 30 விழுக்காடு இடம் ஒதுக்கப்படும் என்று ஸூராய்டா கமாருடின் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவர் மேலும் கூறுகையில் நாட்டிலுள்ள ஒரு கோடியே 33 லட்சம் வாக்காளர்களில் 49 விழுக்காட்டினர் பெண்களாக இருப்பதால் அவர்களின் வாக்குகளைக் கவரும் விதமாக இது அறிவிக்கப்படுவதாக  தெரிவித்தார். அனைத்து பிரிவுகளிலும் பெண்களுக்கு 30 விழுக்காடு இடங்களை ஒதுக்குவதற்கு மக்கள் கூட்டணி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பி.கே.ஆர் தலைமையகத்தில், கடந்த வியாழக்கிழமை மலேசியன் இன்சைடர் இணையதள பத்திரிக்கைக்கு அவர் வழங்கிய சிறப்புப் பேட்டியில்  தெரிவித்தார்.

வரும் பதின்மூன்றாவது பொதுத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் இருக்கும் பெண்களின் வாக்குகளே வெற்றியை நிர்ணயிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறிவரும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தற்போது மக்கள் கூட்டணியில், தாம் உட்பட 9 பெண்களும், தேசிய முன்னணியில் 13 பெண்களும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மகளிர்,குடும்ப, சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சின் ஓர் ஆய்வில் நாட்டிலுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 10.4 விழுக்காட்டினர் பெண்களாகவும், 576 சட்டமன்றத் தொகுதிகளில் 8 விழுக்காட்டினர்  பெண்களாகவும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக மலேசிய இன்சைடர் இணையத் தளம் தெரிவித்துள்ளது.