Home வணிகம்/தொழில் நுட்பம் வட்டி விகிதங்களை உயர்த்தும் அமெரிக்க மத்திய வங்கி! வளரும் நாடுகள் கடும் பாதிப்பு!

வட்டி விகிதங்களை உயர்த்தும் அமெரிக்க மத்திய வங்கி! வளரும் நாடுகள் கடும் பாதிப்பு!

580
0
SHARE
Ad

rajan_625x300_41413093558வாஷிங்டன், அக்டோபர் 13 – அமெரிக்கப் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறப்படுகின்றது.

இவ்வாண்டு தொடக்கம் முதல் கடும் நெருக்கடியில் இருந்த அமெரிக்கப் பொருளாதாரம், தற்போது படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது. இது அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தாலும், வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச்சந்தைகளில் பெரும் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும். எனவே நிலைப்புத் தன்மை இல்லாத நாடுகளில் முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்ய முன்வரமாட்டர். இது அந்நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்நிலையில் இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் (படம்) கூறியுள்ளதாவது:-

#TamilSchoolmychoice

“அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ய இருப்பது பிற வளர்ந்து வரும் நாடுகளின் நிதிச்சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக பங்குச்சந்தைகளில் நிலைப்புத் தன்மை இல்லாமல் போய்விடும்”

“அடுத்த ஆண்டு முதல் அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதனை சமாளிக்க இந்தியா எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.