Home உலகம் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா!

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா!

532
0
SHARE
Ad

un1வாஹிங்டன், அக்டோபர் 14 – காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது.

இவ்விவகாரத்தை அனைத்துலக பிரச்சனையாக கருத முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்  என்று ஆலோசனை கூறியுள்ளது.

சில தினங்களுக்கு முன் காஷ்மீர்  விவகாரத்தை அனைத்துலக பிரச்சனையாக்கும் வகையில் ஐ.நா. பொது  செயலாளருக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரத் துறை  ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கடிதம் எழுதியிருந்தார்.

#TamilSchoolmychoice

அதில் ஒப்பந்தத்தை மீறி  தங்கள் நாட்டு எல்லையில் அத்துமீறி இந்தியா தாக்குதல் நடத்தி வருவதாக  அவர் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையீட்டு  தீர்வுகாண வேண்டும் என்றும் சர்தாஜ் அஜீஸ் கோரிக்கை விடுத்திருந்தது  குறிப்பிடத்தக்கது.