Home கலை உலகம் தனுஷின் ‘அனேகன்’ பாடல்கள் நவம்பர் 10-ல் வெளியீடு!

தனுஷின் ‘அனேகன்’ பாடல்கள் நவம்பர் 10-ல் வெளியீடு!

487
0
SHARE
Ad

Anegan_Posterசென்னை, நவம்பர் 3 – கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் என்ற புதுமுக நடிகை நடித்திருக்கிறார்.

மேலும், நவரச நாயகன் கார்த்திக் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது.

தற்போது இப்படக்குழுவினர் படப்பிடிப்பை முடித்து விட்டு படத்தை வெளியீடு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.

#TamilSchoolmychoice

இதுவரை இந்த முன்னோட்டத்தை யூடியூப்பில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்துள்ளனர்.  அடுத்தகட்டமாக படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர்.

இது தொடர்பாக கே.வி.ஆனந்த் தனது டுவிட்டரில் பக்கத்தில், ‘அனேகன்’ படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் தயாராகி வருகிறோம்.

இதற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி உள்ள பாடல்களை நவம்பர் 10-ம் தேதி வெளியிட உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
படத்தின் பாடல்களை வைரமுத்து, அமுதன். கபிலன் வைரமுத்து  ஆகியோர் எழுதி உள்ளதாகவும் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

http://youtu.be/4ISWKqMJOt0