Home நாடு சிலாங்கூர் துணை சபாநாயகர் நியமனக் கடிதம் பெற்ற பாஸ் உறுப்பினர்

சிலாங்கூர் துணை சபாநாயகர் நியமனக் கடிதம் பெற்ற பாஸ் உறுப்பினர்

587
0
SHARE
Ad

PAS-Logo-Sliderகோலாலம்பூர், நவம்பர் 11 – சிலாங்கூர் சட்டமன்ற துணை அவைத் தலைவர் (சபாநாயகர்) பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ள பாஸ் உறுப்பினர் நியமனக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.  இத்தகவலை அக்கட்சியின் சிலாங்கூர் மாநில ஆணையர் இஸ்கந்தர் சமாட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“துணை சபாநாயகர் பதவிக்காக தேர்வு செய்யப்பட்டவர் யார் என்பதை இப்போது தெரிவிக்க இயலாது. அவர் ஒரு வழக்கறிஞர். அவர் யார் என்பது வரும் 24ஆம் தேதி துணை சபாநாயகர் பதவிக்கான வாக்கெடுப்பிற்காக மாநில சட்டமன்றம் கூடும்போது தெரிவிக்கப்படும்,” என்றார் இஸ்கந்தர் சமாட்.

துணை சபாநாயகர் பதவிக்காக நியமனக் கடிதத்தில் தாம் கையெழுத்திட்டதாகவும், அக்கடிதம் சம்பந்தப்பட்ட அந்த உறுப்பினரைச் சென்றடைந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.