Home நாடு நடிகை மிச்சல் இயோவின் தந்தைக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி

நடிகை மிச்சல் இயோவின் தந்தைக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி

626
0
SHARE
Ad

Michelle Yeoh ஈப்போ, நவம்பர் 10 – பேரா மசீச முன்னாள் தலைவரும்  பிரபல சீன நடிகை மிச்சல் இயோவின் (படம்) தந்தையும் ஆன டத்தோ இயோ கியான் தெய்குக்கு  ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து இன்று தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

அவரது இறுதி ஊர்வலம் ஈப்போ நகர சாலைகளின் வழியே சென்றபோது, இருமருங்கிலும் நூற்றுக்கணக்கானோர் அமைதியாக கூடியிருந்தனர்.

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் மறைந்த அந்த முன்னாள் தலைவரின் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவரது சவப்பெட்டியின் பின்னே துயரம் தோய்ந்த முகத்துடன் நடந்து சென்றதைக் காண முடிந்தது. மொத்தம் 30 பேர் டத்தோ இயோ தெய்க்கின் சவப்பெட்டியைச் சுமந்தனர்.

#TamilSchoolmychoice

இறுதி ஊர்வலத்தில் இயோ கியான் தெய்க்கின் மகளும் பிரபல நடிகையுமான மிச்சல் இயோ (படம்) தனது கணவருடன் கலந்து கொண்டார். மிச்சல் இயோ சீன, ஆங்கிலப் படங்களில் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டிய மலேசிய நடிகை ஆவார். ஈப்போவை பூர்வீகமாகக் கொண்டவர் மிச்சல் இயோ. ஜேம்ஸ்பாண்ட் ஆங்கிலப் படம் ஒன்றிலும் மிச்சல் இயோ நடித்திருக்கின்றார்.

அவரது கணவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜீன் டோட் (Jean Todt), பிரபல கார் பந்தய நிர்வாகியாவார்.

மேலும் மசீச மாநிலத் தலைவர் டத்தோ ஹாங் சூன், தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஓங் கா சுவான் மற்றும் கட்சி உறுப்பினர்களும் இந்த இறுதி ஊர்வலத்தில் திரளாகப் பங்கேற்றனர்.

89 வயதான பேராக் மாநில முன்னாள் மசீச தலைவரான கியான் தெய்க் கடந்த புதன்கிழமை மாலை 6.15 மணியளவில் தமது இல்லத்தில் இயற்கையாக காலமானார்.