Home இந்தியா 6-வது முறையாக நாளை வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி!

6-வது முறையாக நாளை வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி!

657
0
SHARE
Ad

modiடெல்லி, நவம்பர் 10 – பிரதமர் நரேந்திர மோடி நாளை மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி நாடுகளுக்கான பயணத்தைத் தொடங்குகிறார். பிரதமராக கடந்த மே மாதம் பிரதமர் மோடி பதவியேற்ற சில நாட்களில் பூட்டானுக்கு பயணம் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நேபாளம், பிரேசில், ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் மோடி பயணம் மெற்கொண்டார். தற்போது 6-வது முறையாக நாளை முதல் நவம்பர் 20-ம் தேதி வரை வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார் மோடி.

முதலில் மியான்மர் செல்லும் பிரதமர் மோடி, 12-வது ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டிலும், 9-வது கிழக்கு ஆசிய நாடுகள் உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்கிறார்.

#TamilSchoolmychoice

பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் பிஜிக்கு பயணம் மேற்கொள்கிறார் மோடி. நவம்பர் 20-ம் தேதியன்று பிஜியில் இருந்து நாடு திரும்பும் அவர், சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள நேபாளத்துக்கு செல்ல இருக்கிறார்.