Home நாடு நடிகை மிச்சல் இயோ தாமான் ஶ்ரீ மூடா வெள்ளப் பாதிப்புகளை சீர்களையக் களமிறங்கினார்

நடிகை மிச்சல் இயோ தாமான் ஶ்ரீ மூடா வெள்ளப் பாதிப்புகளை சீர்களையக் களமிறங்கினார்

732
0
SHARE
Ad

ஷா ஆலாம் : சமீபத்தில் ஷா ஆலாமில் உள்ள தாமான் ஶ்ரீ மூடாவில் ஏற்பட்ட வெள்ளம், அனைத்துலக சினிமா பிரபலங்களையும் ஈர்த்துள்ளது. மலேசிய சீன நடிகையான டான்ஶ்ரீ மிச்சல் இயோ, கிறிஸ்துமஸ் தின விடுமுறைக்காக மலேசியா திரும்பியவர், தாமான் ஶ்ரீ மூடாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளினால் ஏற்பட்ட சீர்கேடுகளைக் களையவும், தூய்மைப்படுத்தவும் களமிறங்கினார்.

அனைத்துலக அளவில் சீனப் படங்களிலும், ஹாலிவுட் படங்களிலும், டுமாரோ நெவர் டைஸ் (Tomorrow never dies) என்னும் ஜேம்ஸ்பாண்ட் படத்திலும் நடித்துப் பிரபலமானவர் ஈப்போவைச் சேர்ந்த மிச்சல் இயோ. அவரின் கலைச் சேவைக்காகவும், மலேசியாவைப் பிரபலப்படுத்தியதற்காகவும் அரசாங்கம் அவருக்கு டான்ஶ்ரீ என்னும் உயரிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.

வணிகப் பிரமுகரும் பல அறப்பணிகளுக்கு உதவி வருபவருமான டான்ஶ்ரீ வின்சென்ட் டான்னும் மிச்சல் இயோவுடன் வெள்ளச் சீர்கேடுகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். தூய்மைப்படுத்தும் பணிகளில் ஷா ஆலாம் மாநகர் மன்றம், மலேசிய ஆயுதப் படைகளின் தலைவர் ஜெனரல் டான்ஶ்ரீ அபெண்டி புவாங் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால் மிக மோசமாக தாமான் ஶ்ரீ மூடா பாதிக்கப்பட்டது.