Home இந்தியா ராஜபட்சேவின் சூழ்ச்சியால்தான் மீனவர்களுக்கு மரண தண்டனை – வைகோ

ராஜபட்சேவின் சூழ்ச்சியால்தான் மீனவர்களுக்கு மரண தண்டனை – வைகோ

615
0
SHARE
Ad

vaikkoசென்னை, நவம்பர் 13 – இலங்கை அதிபர் ராஜபட்சேவின் சூழ்ச்சியினால்தான் 5 தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.

மலேசியாவில் நடைபெற்ற பினாங்கு உலகத் தமிழ் மாநாட்டில் வைகோ பங்கேற்று உரையாற்றினார். இந்நிலையில் புதன்கிழமை காலை அவர் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் மதிமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது:- “இலங்கைத் தமிழர்களுக்காக நான் பல்வேறு நாடுகளில் நடந்த மாநாடுகளில் பேசி உள்ளேன். ஆனால், மலேசியா மாநாடுதான் என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

#TamilSchoolmychoice

மாநாட்டில் ஈழத் தமிழர்களுக்கு பலத்த ஆதரவு இருந்தது” என்று வைகோ கூறினார்.

பின்னர், தமிழக மீனவர்களை ராஜபட்சே விடுவிப்பார் என்று இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு வைகோ கூறியதாவது,

“ராஜபட்சேவின் அரசியல் சூழ்ச்சியால்தான் தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தி வந்தவர்களுக்குக்கூட மரண தண்டனை கொடுக்கப்பட்டது இல்லை”.

“இந்திய அரசைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த, எல்லாவிதமான முயற்சியிலும் ராஜபட்சே ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதிதான் கைதும், விடுவிக்க முயற்சிப்பதும்” என்றார் வைகோ.