Home இந்தியா வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 2 புலிகள் தப்பி ஓட்டமா?

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 2 புலிகள் தப்பி ஓட்டமா?

426
0
SHARE
Ad

Tiger Photoசென்னை, நவம்பர் 16 – சென்னைக்கு அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து 2 புலிகள் வெளியேறியதாக தகவல் பரவியதால், அந்த வட்டார சுற்றுப் புறங்களில் பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது.

இந்த உயிரியல் பூங்காவில் புலிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று முன்தினம் இந்தச் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.

இதையடுத்து அங்கு அடைக்கப்பட்டிருந்த புலிகளில் 2 தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்டது. மேலும் வனத்துறையினர், காவல் துறையினர் அடங்கிய 8 குழுக்கள் புலிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் சென்னையின் புறநகர்ப் பகுதியில் வசிப்பவர்களிடையே பெரும் பீதி நிலவியது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் விலங்குகள் எதுவும் உயிரியல் பூங்காவிலிருந்து வெளியேறவில்லை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததும், வனத்துறை அதிகாரிகள் மற்றும் பூங்கா நிர்வாகத்தினர், உயிரியல் பூங்கா வளாகத்தில் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டதாகவும், இதன்மூலம் விலங்குகள் ஏதும் வெளியேறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் பூங்காவில் பார்வையாளர்களுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படும் எனவும் பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.