Home உலகம் வட கொரியாவிற்கு எதிராக ஐநா தீர்மானம் – “அணு ஆயுத சோதனை நடத்துவோம்” வட கொரியா பதிலடி!

வட கொரியாவிற்கு எதிராக ஐநா தீர்மானம் – “அணு ஆயுத சோதனை நடத்துவோம்” வட கொரியா பதிலடி!

582
0
SHARE
Ad

03-korea-mapபியாங்யாங், நவம்பர் 22 – ஐ.நா.வில் வட கொரியாவிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் நாடு மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.

ஐ.நா.வில் கடந்த புதன்கிழமை வட கொரியாவிற்கு எதிராக முக்கியத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வட கொரிய அரசு தொடர்ந்து மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. இந்த விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்லவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ள வட கொரியாஇதற்குப் பதிலடியாகவே அணு ஆயுதப் பரிசோதனை நடத்துவோம் என்ற மிரட்டலை விடுத்துள்ளது என்று பொது நோக்கர்கள் கூறுகின்றனர்.