Home வணிகம்/தொழில் நுட்பம் அமெரிக்க டாலர் மதிப்பை குறைக்க ரஷ்யா புதிய திட்டம்! 

அமெரிக்க டாலர் மதிப்பை குறைக்க ரஷ்யா புதிய திட்டம்! 

784
0
SHARE
Ad

US Dollar imageமாஸ்கோ, நவம்பர் 22 – அமெரிக்கா-ரஷ்யா இடையே நெடுங்காலமாகவே நல்லுறவு இருந்ததில்லை. தனித்த முறையில் இரு நாடுகளும் சம பலம் கொண்டிருப்பதால், ஒன்றை ஒன்று வீழ்ச்சி அடையச் செய்ய பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா முழு முதற்காரணமாக இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்கா, தனது நட்பு நாடான சவுதி அரேபியாவிடம் மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கியது. மேலும், கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பிற்கும் காரணமாக இருந்தது.

இதனால் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான அனைத்துலகத் தேவை குறைந்தது. சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய்யை விட ரஷ்ய எண்ணெய் விலை சுமார் மூன்று மடங்கு அதிகம். இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் சற்றே தள்ளாடியது. எனினும் ரஷ்யா சீனாவின் ஆதரவால் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில், ரஷ்யா அமெரிக்காவின் டாலர்கள் மாதிப்பை குறைக்க புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அந்த திட்டப்படி, இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 150 மெட்ரிக் டன் தங்கத்தை ரஷ்ய மத்திய வங்கி வாங்கி இருப்பு வைத்துள்ளது. தங்கத்தை தேவைக்கேற்ப அதிகமாக உற்பத்தி செய்து விட முடியாது. இதன் காரணமாக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை தானாக அதிகரிக்கும்.

இதனால் வாடிக்கையாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவர். இதன் விளைவாக அமெரிக்க டாலர் பத்திரங்களில் முதலீடு குறைந்து டாலரின் மதிப்பு வீழ்ச்சியடையும். இந்த திட்டத்தை ரஷ்யா முழு முயற்சியுடன் செய்து வருகின்றது.

ரஷ்யாவின் இந்த வர்த்தக சூழ்ச்சியை அமெரிக்கா எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.