Home நாடு கிளந்தான்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கிளந்தான்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

612
0
SHARE
Ad

Kelantan Terengganu mapகோத்தாபாரு, நவம்பர் 23 – கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாசீர் பூத்தேவில் உள்ள 3 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் ஒரே இரவில் 130இல்
இருந்து 155 பேராக உயர்ந்துள்ளது.

முலோங் பள்ளியில் 96 பேரும், தியோங் பள்ளியில் 34 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாசீர் பூத்தேவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 பேர் இங்குள்ள பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று இரவு 9.05 மீட்டராக இருந்த சுங்கை கோலோக் அணையின்
நீர்மட்டம் இன்று காலை 8.79 மீட்டராக குறைந்துள்ளது. அபாயகரமான நீர்மட்டத்தின் அளவு 9 மீட்டராகும்.

#TamilSchoolmychoice

மாநிலத்தின் இதர ஆறுகளின் நீர்மட்ட அளவு அபாய அளவை எட்டிப் பிடிக்கவில்லை. மேலும் எந்த முக்கிய சாலைகளும் இதுவரை மூடப்படவில்லை. நேற்று காலை கிளந்தானில் வானிலை மழை ஏதுமின்றி பிரகாசமாக காணப்பட்டது.

இதற்கிடையே கோல திரங்கானுவில் வெள்ளம் குறைந்து வருவதாகவும், வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டு தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப
அனுமதிக்கப்படுவதாகவும் தேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3879 பேரில் இதுவரை 1138 பேர் வீடு திரும்ப
அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.