Home இந்தியா தமிழகம் வந்த 5 மீனவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!

தமிழகம் வந்த 5 மீனவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!

543
0
SHARE
Ad

5 Fishermen Tamil Nadu releasedராமேஸ்வரம், நவம்பர் 23 – இலங்கையில் இருந்து தூக்கு தண்டனை ரத்தாகி தமிழகம் திரும்பி உள்ள 5 மீனவர்களும் சொந்த தொழில் துவங்குவதற்காக தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்திய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் உள்ளிட்ட 5 மீனவர்களும் கொழும்பில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.

பின்னர் அவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை அமைச்சர்கள் பா.வளர்மதி, ஜெயபால், டாக்டர் சுந்தர்ராஜ் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

#TamilSchoolmychoice

பிறகு 5 மீனவர்களும்  காரில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் ஊர் செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தமிழக அரசே செய்திருந்தது.

அதன்படி 5 மீனவர்களும் சென்னையில் இருந்து தங்கச்சி மடத்துக்கு அரசின் செலவில் சென்று சேர்ந்தனர். இதற்கிடையே 5 மீனவர்களும் கடந்த சுமார் 3 ஆண்டுகளாக சிறையில் இருந்ததால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது.

எனவே அவர்கள் 5 பேரும் புதிய வாழ்க்கை தொடங்க தேவையான உதவிகள் செய்து கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி 5 மீனவர்களுக்கும் தலா ரூ.3 லட்சம் தமிழக அரசு கொடுத்துள்ளது.

இதற்கான காசோலையை அந்த 5 மீனவர்களிடமும் அமைச்சர்கள் வளர்மதி, ஜெயபால், சுந்தர்ராஜ் ஆகியோர் வழங்கினார்கள். தமிழக மீனவர்கள் 5 பேரும் இலங்கை சிறையில் வாடிய போது அவர்களது குடும்பத்துக்கு எல்லா உதவிகளையும் தமிழக அரசு செய்தது.

இப்போது அந்த 5 மீனவர்கள் குடும்பத்தினர் புதிய வாழ்க்கை தொடங்க மீண்டும் தமிழக அரசு நிதி உதவி செய்துள்ளது. தமிழக அரசின் இந்த தொடர் முயற்சிகள் மற்றும் நிதி உதவிகள் தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக மீனவர்கள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.