ஜார்ஜ் டவுன், டிசம்பர் 4 – பினாங்கு மாநிலத்தில் மியான்மர் நாட்டவர்கள் தொடர் கொலைகள் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில், 15 மியான்மர் பிரஜைகளை அம்மாநில காவல்துறை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.
இதில் புக்கிட் மெர்த்தாஜாம் மற்றும் நிபோங் தெபாலில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்களுக்கும், அவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.
“கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20 முதல் 40 வயதிற்கு உட்பட்ட 15 ஆண்களை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளோம்” என்று பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் ரஹிம் ஹனாஃபி தெரிவித்துள்ளார்.
பழிக்குப் பழி வாங்குதல் தான் இந்த கொலைக்களுக்கான நோக்கம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார்.