Home நாடு பினாங்கில் மேலும் ஒரு வெளிநாட்டவர் கொலை!

பினாங்கில் மேலும் ஒரு வெளிநாட்டவர் கொலை!

594
0
SHARE
Ad

Murderஜார்ஜ் டவுன், டிசம்பர் 8 – பினாங்கில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று தொடர் கொலைகள் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ரெலாவ் என்ற பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் இன்று மற்றொரு வெளிநாட்டவரின் உடல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கின்றது.

#TamilSchoolmychoice

இது குறித்து பினாங்கு குற்றப்புலனாய்வுத் துறையில் மூத்த துணை ஆணையர் மஸ்லான் கேஷா கூறுகையில், இன்று காலை 2 மணி முதல் 5 மணிக்குள் இந்த சம்பவம் நடைபெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது என்றும், குற்றவியல் சட்டம் பிரிவு 302 -ன் கீழ், இந்த சம்பவம் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மஸ்லான் கூறியுள்ளார்.