Home உலகம் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் மேற்கத்திய நாடுகளின் சதி – ஈரான்!

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் மேற்கத்திய நாடுகளின் சதி – ஈரான்!

532
0
SHARE
Ad

iran-mapதெக்ரான், டிசம்பர் 12 – உலக அளவில் கச்சா எண்ணெய் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக உலக பொருளாதாரம் எழுச்சி பெற்றுள்ளது.

எனினும், கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஈரான், எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் செய்த சதியே காரணம் என குற்றம் சாட்டி உள்ளது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி தொடர்பாக எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூடி ஆலோசனை நடத்தின. அதில், ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து எண்ணெய் விலை வீழ்ச்சியை தடுக்க வேண்டும் என்று வற்புறுத்தின.

#TamilSchoolmychoice

ஆனால் அதை மற்ற நாடுகள் ஏற்கவில்லை. எண்ணெய் உற்பத்தி அதே நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் விலை மேலும் சரிந்து வருகின்றது.

இந்நிலையில் இதுபற்றி ஈரான் அதிபர் ஹசன்ரொகானி கூறியதாவது:– “கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் மேற்கத்திய நாடுகளின் சதி இருப்பதாக கருதுகிறோம். விலை வீழ்ச்சியால் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது”.

“பேரல் ஒன்றிற்கு 100 டாலர் வரை விலை இருந்தால் மட்டுமே, ஈரான் பொருளாதாரத்தில் எந்தவொரு பிரச்சினையும்  இல்லாமல் இருக்கும். ஆனால் விலை கடுமையாக குறைந்திருப்பதால் நாங்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றோம்.”

“எண்ணெய் உற்பத்தியை குறைத்து விலையை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் விடுத்த கோரிக்கையையும் ஏற்கவில்லை. ஈரான் போன்ற நாடுகளை முடக்குவதற்காக சதி நடந்துள்ளது. இதன் காரணமாகத்தான் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.