Home வாழ் நலம் புற்றுநோய் வராமல் தடுக்கும் சீத்தாப்பழம்!

புற்றுநோய் வராமல் தடுக்கும் சீத்தாப்பழம்!

1070
0
SHARE
Ad

custard-appleடிசம்பர் 16 – சீத்தாப்பழத்தை உண்டால், செரிமானம் ஏற்படும். சீத்தாப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். சீத்தாப்பழச் சதையோடு உப்பைக் கலந்து வர பருக்கள் மறையும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வந்தால், அவர்களின் எலும்புகள் உறுதியாகும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து, எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டு வந்தால் புண்கள் ஆறும்.

custardappleஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், சீத்தாப்பழம் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.  சீத்தாப்பழம் புற்றுநோய்க்கு, ஓர் அற்புதமான மருந்து.

#TamilSchoolmychoice

கீமோதெரபி எனப்படும் சிகிச்சையை விட 10,000 மடங்கு அதிகம் பலன் தரக்கூடியதாம் சீத்தாப்பழம். புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதால் இந்தோனேஷியா, இந்தியா ஆகிய நாடுகளில் முன்னெச்சரிக்கையுடன் அன்றாட பயன்பாட்டு உணவில் சேர்த்துள்ளனர்.

உதாரணமாக இப்பழத்தில் இருந்து குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள் செய்து சாப்பிடுகின்றனர். சீத்தாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.

cuatard-appleமேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து, வைட்டமின்சி, போன்றவையும் அடங்கியுள்ளன.

சீத்தாப் பழத்துக்கு ஆங்கிலத்தில் ‘கஸ்டர்ட் ஆப்பிள்’ என்று பெயர். ஆப்பிள் போலவே குளிர்ந்த சூழலில் வளரக்கூடிய சீத்தாப்பழம், உண்மையில் ஆப்பிளுக்கு இணையான மருத்துவ குணங்களும், இணையற்ற சுவையும் கொண்டது.  சீத்தாப்பழம் நினைத்தாலே நா தித்திக்க வைக்கும் தேன்பழம்.