Home கலை உலகம் எழுந்து வாருங்கள் பாலசந்தர் ஐயா! கண்ணீருடன் கமல் மடல் (காணொளி உள்ளே)

எழுந்து வாருங்கள் பாலசந்தர் ஐயா! கண்ணீருடன் கமல் மடல் (காணொளி உள்ளே)

654
0
SHARE
Ad

Kamal-kb_20114_mசென்னை, டிசம்பர் 16 – கமல்ஹாசன் என்ற நடிகர் உருவானதற்கு மிக முக்கிய காரணம் கே.பாலசந்தர் தான். இது மட்டுமில்லாமல் இந்திய சினிமாவின் அடையாளம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரகாஷ் ராஜ், காமெடி நடிகர் விவேக் என அனைவரும் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.

இந்நிலையில் நேற்று அவரின் உடல் நிலை மிக மோசமான நிலைக்கு செல்ல ,சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து உத்தம வில்லன் படத்தின் இறுதி கட்ட பணியில் இருக்கும் கமல் மிக உருக்கமாக கூறியதாவது;

“இது எல்லாம் நீங்கள் கொடுத்தது தான், உங்களுடன் நான் தொலைப்பேசியில் பேசிய 1.30 நிமிடம் என்ன பேசினீர்கள் என்று புரிய வில்லை, ஆனால், அது என்னவாக இருக்கும் என நானே புரிந்து கொண்டேன். முடிந்தால் மீண்டும் எழுந்து வாருங்கள் ஐயா!’ என்று குரல் மங்கி கூறியுள்ளார் கமல்.

#TamilSchoolmychoice

கே.பாலசந்தர் பற்றி கமல் கூறியதை  கீழே காணலாம்: