Home கலை உலகம் இயக்குநர் பாலச்சந்தர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

இயக்குநர் பாலச்சந்தர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

565
0
SHARE
Ad

k-balachanderசென்னை, டிசம்பர் 17 – சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், திரைப்பட இயக்குநர் கே. பாலச்சந்தர் (84) உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர். சில தினங்களுக்கு முன், சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு. உடனே அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு காய்ச்சல், வயோதிக நோய் பாதிப்பு உள்ளது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

#TamilSchoolmychoice

நடிகர்கள் ரஜினி, மனோபாலா, விஜயகுமார், மற்றும் பல நடிகர்களும், இயக்குநர்கள் பாரதி ராஜா, மணிரத்னம், நடிகை கே.ஆர்.விஜயா, தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் உட்பட தமிழ் திரையுலகத்தினர், மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.

நேற்று மாலை அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து, மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“பாலச்சந்தர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. சிறுநீரக நோய் தொற்றால், உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் உடல்நிலையை சீராக்க, தலைமை மருத்துவக் குழுவால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.