Home உலகம் ஏர் ஆசியா விமானத்தை தேடும் பணியில் இந்திய கடற்படை கப்பல்கள் ஈடுபடலாம்!

ஏர் ஆசியா விமானத்தை தேடும் பணியில் இந்திய கடற்படை கப்பல்கள் ஈடுபடலாம்!

535
0
SHARE
Ad
Indian Navy

கோலாலம்பூர், டிசம்பர் 28 – இன்று காலை காணாமல் போன ஏர் ஆசியா விமானத்தை தேடும் பணியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான 3 கப்பல்கள் ஈடுபடுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபடுத்த 3 கப்பல்களை இந்திய கடற்படை தயார் நிலையில் வைத்துள்ளதாக ‘ஸீ நியூஸ்’ (ZEE NEWS) தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான போயிங் பி8-1 ரக விமானம் ஒன்றும் தயார் நிலையில் இருப்பதாக அத்தொலைக்காட்சி மேலும் கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது, இந்தோனிசியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் கூட்டாக விமானத்தைத் தேடும் வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டுள்ள வேளையில், இந்தியாவும் உதவ முன்வந்துள்ளது.

பிரிட்டன் போன்ற நாடுகளும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.