Home உலகம் ஏர் ஆசியா விமானம்: இன்றைய தேடுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன!

ஏர் ஆசியா விமானம்: இன்றைய தேடுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன!

665
0
SHARE
Ad

AirAsiaஜாகர்த்தா, டிசம்பர் 28 – இன்று காலை முதல் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்புகளை இழந்த பின்னர், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள ஏர் ஆசியா QZ 8501 விமானத்தைத் தேடும் பணிகள் இன்று மாலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இரவு வேளை நெருங்கியதால் எங்கும் இருள்  சூழ்ந்ததால், தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன என இந்தோனிசிய போக்குவரத்து அமைச்சு அறிவித்தது.

நாளைக் காலை 6.00 மணி முதல் மீண்டும் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

விமானம் புறப்பட்ட பின்னர் 42 நிமிடங்கள் கழித்து அந்த ஏர் ஆசியா விமானம் காணாமல் போனது. அது காணாமல் போனது எனக் கருதப்படும் ஜாவா கடலில் உள்ள பெலித்துங் தீவுப் பகுதியில் இந்தோனிசியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று இந்தோனிசிய விமானங்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்ட வேளையில், தேடுதலில் ஈடுபட்டிருக்கும் சிங்கப்பூரின் விமானப் படையும், கடற்படையும் இரண்டு C-130 விமானங்களை அந்தப் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளன.