Home உலகம் மாயமான ஏர் ஆசியா விமானத்தை தேடும் பணி தொடங்கியது!

மாயமான ஏர் ஆசியா விமானத்தை தேடும் பணி தொடங்கியது!

479
0
SHARE
Ad

Air Asia A320 Plane - File Pictureஜகார்த்தா, டிசம்பர் 29 – ஜாவா கடல் அருகே 162 பேருடன் மாயமானதாக நம்பப்படும் ஏர் ஏசியா QZ8501 விமானத்தைத் தேடும் பணியை இந்தோனேசியா இன்று காலை 6 மணியளவில் தொடங்கியது.

இது குறித்து அந்நாட்டின் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகமையின் துணை இயக்குநர் தலைவர் டாட்டாங் ஜைனுதின் கூறுகையில், “இன்று காலை 6 மணியளவில் தேடுதல் பணியைத் தொடங்கினோம். கிழக்கில் பெலிதுங் தீவு நோக்கி தேடுதல் நடத்தவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை 5.35 மணியளவில் சுரபாயாவிலுள்ள ஜுவாண்டா அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ஏர் ஏசியா QZ8501 விமானம் ஒரு மணி நேரம் கழித்து ரேடார் தொடர்பில் இருந்து விடுபட்டது.

#TamilSchoolmychoice

நடுவானில் கடுமையான புயல் காரணமாக விமானத்தின் பாதையை மாற்றிக் கொள்ளுமாறு விமானிக்கு உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமானம் மாயமானதாகக் கூறப்படுகின்றது.

மேலும், “ஏர் ஏசியா விமானத்தைத் தேடி நான்கு மீட்பு விமானங்கள் சென்றுள்ளன. விரைவில் கண்டுபிடித்துவிடுவோம். மலேசியா, சிங்கப்பூரில் இருந்து கப்பல்கள் மற்றும் விமானங்களை மீட்பு நடவடிக்கைகளுக்கு எதிர்பார்க்கின்றோம். அதற்கான ஆவணங்களை தயார் செய்து வருகின்றோம். இன்னும் சில மணி நேரங்களில் அவர்களும் எங்களுடன் தேடுதல் பணியில் ஈடுபடுவார்கள் என நம்புகின்றோம்” என்றும் ஜைனுடின் தெரிவித்துள்ளார்.