Home அரசியல் பிரதமருக்கு 75 விழுக்காடு இந்தியர்கள் ஆதரவு

பிரதமருக்கு 75 விழுக்காடு இந்தியர்கள் ஆதரவு

696
0
SHARE
Ad

najiibகோலாலம்பூர், பிப்.27- தேசிய முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன  என்று 45 விழுக்காட்டினர் கூறிய வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவு  அளிக்கின்றோம் என்று 75 விழுக்காட்டு இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு முழுவதிலும் 1,021 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரிய வந்ததாக  மெர்டேக்கா செண்டர் என்ற தனியார் கருத்தாய்வு நிறுவனம் தெரிவித்தது.

தேசிய முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன என்று 48 விழுக்காட்டினரும் தேசிய முன்னணியை நேசிக்கின்றோம் என்று 45 விழுக்காட்டினரும் கூறினர்.

#TamilSchoolmychoice

இந்தியர்கள் மத்தியில் பிரதமரின் செல்வாக்கு 75 விழுக்காடாக இருக்கிறது. மலாய்க்காரர்களில் 73 விழுக்காட்டினரும் சீனர்களில் 35 விழுக்காட்டினரும் பிரதமரின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

-தி மலேசியன் இன்சைடர்