Home உலகம் ஏர் ஆசியா: தொலைக்காட்சி காட்சிகளைக் கண்டு கதறியழுத பயணிகளின் குடும்பத்தார்

ஏர் ஆசியா: தொலைக்காட்சி காட்சிகளைக் கண்டு கதறியழுத பயணிகளின் குடும்பத்தார்

848
0
SHARE
Ad

சுராபாயா, டிசம்பர்  31 – கடலில் மிதந்து கொண்டிருந்த ஏர் ஆசியா பயணியின் சடலம் மற்றும் விமானத்தின் பாகங்களை இந்தோனேசிய தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியதைக் கண்ட, ஏர் ஆசியா விமானப் பயணிகளின் குடும்பத்தார் கதறி அழுதனர்.

A still image taken from a videographer's footage of a rescue operation of a body believed to be a passenger of the AirAsia airplane floating in the ocean off the coast of Pangkalan Bun, Borneo, Indonesia, 30 December 2014. Floating debris, a possible fuselage, and several bodies were spotted 30 December by rescuers searching for an AirAsia plane with 162 people on board, as officials said they were nearly certain they had found the remains of flight QZ8501. AirAsia Indonesia flight QZ8501 disappeared from radar over the Java Sea after taking off from Surabaya in Indonesia's East Java province en route to Singapore on 28 December morning. AirAsia said 155 of the people on board were Indonesians. The others included three from South Korea, and one each from Singapore, Malaysia, France and Britain. EPA/STR ATTENTION
கடலில் மிதக்கும் சடலம் ஒன்றை மீட்கப் போராடும் மீட்புப் படையினர்

சுராபாயாவில் உள்ள ஜுவான்டா அனைத்துலக விமான நிலையத்தில் அமைக்கப் பட்டிருக்கும் பேரிடர் மையத்தில் குழுமியிருந்த விமானப் பயணிகளின் குடும்பத்தார் இக்காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டதும் ‘ஓ’வென பெருங்குரலெடுத்து, கதறினர்.

பலர் இடைவிடாமல் அழுது அரற்றிய நிலையில், ஓர் ஆடவர் தனது முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு கதறியபடியே மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

#TamilSchoolmychoice

இதேபோல் கண்ணீர்விட்ட ஒரு பெண்மணியை சுராபாயா நகர மேயர் அமைதிப்படுத்தினார்.

இதற்கிடையே ஏர் ஆசியா பயணியின் சடலம் கடலில் மிதக்கும் காட்சிகளை தணிக்கை செய்யாமல் நேரலையில் ஒளிபரப்பியதற்காக அக்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஏர் ஆசியா அதிகாரி ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

A handout photograph released by the Royal Malaysian Navy on 31 December 2014 shows Royal Malaysian Navy ship KD Lekir retrieving the emergency evacuation tube from AirAsia flight QZ8501 during the search and rescue mission of the crashed Air Asia airplane in the ocean off the coast of Pangkalan Bun, Borneo, Indonesia, 31 December 2014. The search to recover more victims from the AirAsia plane crash was hampered by bad weather. AirAsia Indonesia flight QZ8501 crashed into the Java Sea on 28 December, about halfway through a two-hour flight between Surabaya, Indonesia's second largest city, and Singapore. EPA/MALAYSIA NAVY HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES
மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் “கேடி லெக்கிர்” என்ற பெயருடைய அரச மலேசியக் கடற்படைக் கப்பலில் இன்று சடலங்களும், விமானப் பாகங்களும் மீட்கப்பட்ட காட்சி

ஏர் ஆசியா விமான பாகங்கள் கடலில் மிதப்பதாக செவ்வாய்க்கிழமை தகவல் வெளியானபோதும், பேரிடர் மையத்தில் குழுமியிருந்த பயணிகளின் உறவினர்கள் மத்தியில் இறுக்கமான அமைதியே நிலவியது.

சிலர் அது ஏர் ஆசியா விமானத்தின் பாகங்கள் அல்ல என்றும் நம்பினர்.

ஆனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளைக் கண்டதும் பயணிகளின் உறவினர்கள் மனதளவில் நொறுங்கிப் போயினர்.

அந்தப் பேரிடர் மைய அறையில் அதன் பின்னர் சோகமும், கதறல்களும், குமுறல்களும் சூழ்ந்து கொண்டன.