Home உலகம் ஏர் ஆசியா: கறுப்புப் பெட்டியை தேட ஒருவாரம் ஆகலாம்!

ஏர் ஆசியா: கறுப்புப் பெட்டியை தேட ஒருவாரம் ஆகலாம்!

509
0
SHARE
Ad

பெங்காலான் பன், ஜனவரி  1 – மோசமான வானிலை காரணமாக கடலில் விழுந்த ஏர் ஆசியா விமானத்தை தேடும் முயற்சியை முழு வீச்சில் தொடர முடியாமல் மீட்புக் குழுவின் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கடல் கொந்தளிப்பு காரணமாக விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடிப்பிடிக்க ஒரு வாரமாகக் கூடும் என இந்தோனேசிய விமானப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

A handout photograph released by the Royal Malaysian Navy on 31 December 2014 shows Royal Malaysian Navy ship KD Lekir retrieving the body of a victims from AirAsia flight QZ8501 during the search and rescue mission of the crashed Air Asia airplane in the ocean off the coast of Pangkalan Bun, Borneo, Indonesia, 31 December 2014. The search to recover more victims from the AirAsia plane crash was hampered by bad weather. AirAsia Indonesia flight QZ8501 crashed into the Java Sea on 28 December, about halfway through a two-hour flight between Surabaya, Indonesia's second largest city, and Singapore.நவீன கருவிகள் மூலம் ஜாவா கடலில் மிகப்பெரிய பொருள் ஒன்று ஆழ்கடலில் புதைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் அடங்கிய குழுவினர் கடலின் ஆழத்துக்குச் சென்று அப்பொருளைக் கண்டறிவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன ஏர் ஆசியா விமானம் எனக் கருதப்படும் அந்தப் பொருள் தற்போது சுமார் 100 முதல் 165 அடி ஆழத்துக்குள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

“கடைசியாக கிடைத்த தகவல் சரியாக இருக்குமென நம்புகிறேன். விமானம் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கருதுகிறேன். எல்லோருமே கூட்டாக நம்புவோம். இது மிகவும் முக்கியம்,” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஏர் ஆசியா தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ்.

விமானம் இருக்கும் இடம் குறித்த சந்தேகங்கள் நீடிப்பதால், அதன் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்க ஒரு வாரமாகலாம் என இந்தோனேசியாவின் போக்குவரத்து பாதுகாப்புக்கான தேசிய குழுவின் அதிகாரியான டூஸ் சேனிடியோசோ கூறுகிறார்.

“முதலில் விமான பாகங்கள் அதிகமுள்ள பகுதியை துல்லியமாகக் கண்டறிய வேண்டும். அதன் பிறகே கறுப்புப் பெட்டியைத் தேட முடியும். இதுவரை கருப்புப் பெட்டியில் இருந்து எந்தவிதமான ஒலிக்குறிப்புகளும் வெளியாகவில்லை. கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்க இரு வழிமுறைகள் உள்ளன. அதில் ஒன்று, விமானப் பாகங்கள் அதிகமுள்ள இடத்தைக் கண்டறிவது,” என்கிறார் சேனிடியோசோ.