Home வணிகம்/தொழில் நுட்பம் வரிச் சலுகை இல்லை – இந்தியாவில் வாகனங்களின் விலை ஏற்றம்!

வரிச் சலுகை இல்லை – இந்தியாவில் வாகனங்களின் விலை ஏற்றம்!

559
0
SHARE
Ad

New-Cars-in-Indiaபுதுடெல்லி, ஜனவரி 5 – இந்திய அரசு, வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை திரும்பப் பெற இருப்பதால், கார்களின் விலை உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் பொருட்டு, கார்கள் மற்றும் வாகனங்களுக்கு அதிக வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், மோடி அரசு 2014-ம் ஆண்டின் இறுதி வரை அதனை நீட்டித்து வந்தது. தற்போது, 2015-ம் ஆண்டின் தொடக்கம் முதல் அதனை திரும்பப் பெற இருப்பதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக இந்தியாவின் நிதித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- “கடந்த ஆட்சியில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகள் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தன”.

“அதனை புதுப்பிக்க மோடி அரசு விரும்பவில்லை. குறிப்பாக, இறக்குமதியாகும் சிறிய ரக கார்களுக்கு 8 முதல் 12 சதவீத வரிகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.”

“உதாரணமாக, 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரக் கார்களுக்கு, 200,000 ரூபாய் வரை வரி விதிக்க வாய்ப்புள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் பொருளாதார முன்னேற்றம் உச்சத்தை நோக்கி பயணிப்பதால், கார்களுக்கு விதிக்கப்பட இருக்கும் அதிக வரி, விற்பனையை கடுமையாக பாதித்தாலும், அது நிரந்தர தொய்வை ஏற்படுத்தாது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.