Home உலகம் இந்தியப் பயணம் ஆபத்தானது-குடிமக்களுக்கு ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை!

இந்தியப் பயணம் ஆபத்தானது-குடிமக்களுக்கு ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை!

546
0
SHARE
Ad

indiaகான்பெர்ரா, ஜனவரி 8 – இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகம் உள்ளது. அதனால் அங்கு பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய மக்கள் கூடுதல் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு வருகிறார்கள் என தொடர்ந்து எங்களுக்கு அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன”.

“ஆஸ்திரேலிய மக்கள், இந்தியாவில், அடிக்கடி பயணிக்கும் இடங்கள் உள்பட எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அவர்கள் தாக்குதல் நடத்தலாம்”.

#TamilSchoolmychoice

“எனவே இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். முடிந்தவரை பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்” என்று அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் எதிர்வரும் 26-ம் தேதி நடைபெற இருக்கும் குடியரசுதினக் கொண்டாட்டங்களை குறி வைத்து தீவிரவாதிகள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சதித் திட்டங்களை தீட்டி இருப்பதாக இந்திய மற்றும் அமெரிக்க உளவுத் துறை வட்டாரங்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.