Home வணிகம்/தொழில் நுட்பம் எண்ணெய் விலை தொடர் சரிவு – பெரும் பாதிப்பில் விநியோகஸ்தர்கள்!

எண்ணெய் விலை தொடர் சரிவு – பெரும் பாதிப்பில் விநியோகஸ்தர்கள்!

497
0
SHARE
Ad

petronasகோலாலம்பூர், ஜனவரி 17 – எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் காரணமாக மலேசிய பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் பலர், தங்கள் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தொர்பாக பெட்ரோனாஸ் பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் டத்துக் அபு சமாஹ் பாசிக் கூறியதாவது:-

“மக்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி எத்தகய தகவல்களும் தெரிவதில்லை. எண்ணெய் விலையை நிர்ணயிக்க அரசு அறிமுகப்படுத்திய விலை நிர்ணய முறைகளினால், சுமார் 100,000 ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. கடும் நஷ்டத்திலும், நாங்கள் அதிகப்படியான பெட்ரோல் பங்குகளை வாங்க வேண்டி உள்ளது. இது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக சிரமங்களை ஏற்படுத்தி உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், “பெட்ரோல் விலை அதிகமானால், மக்கள் தங்கள் தேவைக்கு அதிகமாக வாங்கி இருப்பு வைத்துக் கொள்கின்றனர். அதன் காரணமாகவும் கடும் நஷ்டம் ஏற்படுகின்றது. தற்போதைய நிலையில், விலை அதிகமானாலும், குறைந்தாலும் விநியோகஸ்தர்களே பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். அதனால், அரசு தற்போதய முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

இதே போன்ற கருத்தினை பிஆர்கே அமைப்பின் துணைத் தலைவர் ரபிசி ரம்லியும் தெரிவித்துள்ளார். தொடர் சரிவுகளால் எண்ணெய் நிறுவன விநியோகஸ்தர்கள் தங்கள் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ளும் முடிவிற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.