Home அவசியம் படிக்க வேண்டியவை 600,000 உறுப்பினர்கள் கொண்ட மஇகா-வில் ஒருவர் தன்மூப்பாக செயல்பட முடியாது!

600,000 உறுப்பினர்கள் கொண்ட மஇகா-வில் ஒருவர் தன்மூப்பாக செயல்பட முடியாது!

523
0
SHARE
Ad

Dr Subramaniam Ministerகோலாலம்பூர், ஜனவரி 12 – சுமார் 600,000 உறுப்பினர்கள் உள்ள மஇகா கட்சியில் தனி நபராக ஒருவர் செயல்பட அனுமதிக்க முடியாது. மஇகா -வை மீட்பது அனைவருக்கும் பொதுவான பொறுப்பு  என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ மஇகா-வைச் சேர்ந்த சுமார் 200 தன்னார்வலர்கள் நேற்று அக்கட்சியின் தலைமையகத்தில் இருந்து புறப்பட்டனர்.

அதற்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுப்ரா, “ஆர்ஓஎஸ்-ன் நடவடிக்கையிலிருந்து மஇகா கட்சியின் பதிவு ரத்தாகாமல் காப்போம்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும், மறுதேர்தல் குறித்து கட்சியின் முடிவு என்ன என்பது குறித்து கருத்துத் தெரிவிக்க சுப்ரா மறுத்துவிட்டார்.

இதனிடையே, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உணவுப் பொருட்கள், சமயல் பொருட்கள், பணம் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் என சுமார் 400,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை மஇகா தன்னார்வலர்கள் கொண்டு செல்வதாக சுப்ரா குறிப்பிட்டார்.