Home இந்தியா ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: அன்பழகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: அன்பழகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

586
0
SHARE
Ad

ANBAZHAGAN,பெங்களூரு, ஜனவரி 14 – ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்க்க வேண்டும் என தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. அப்போது, அரசு வழக்கறிஞருக்கு உதவுவது குறித்து எழுத்துப்பூர்வமான மனு அளிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.

மேலும், அன்பழகன் நேரில் ஆஜராக வேண்டும் என கூறினார். ஆனால் அன்பழகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அன்பழகனுக்கு 93 வயதாகிவிட்டது. அவருக்கு பதில் நான் ஆஜராகுவதாக கூறினார்.

#TamilSchoolmychoice

ஆனால் நீதிபதி, இது கிரிமினல் வழக்கு. இந்த காரணம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என கூறினார். அன்பழகன் நேரில் ஆஜராவது குறித்து மனு தாக்கல் செய்ய அரசு தரப்பு மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.