Home வணிகம்/தொழில் நுட்பம் விலைப் பட்டியலுடன் ‘ஜிஎஸ்டி’ குறிப்புகள் – டெஸ்கோ அறிவிப்பு!

விலைப் பட்டியலுடன் ‘ஜிஎஸ்டி’ குறிப்புகள் – டெஸ்கோ அறிவிப்பு!

742
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 24 –  ‘டெஸ்கோ ஸ்டோர்ஸ் மலேசியா’ (Tesco Stores Malaysia) வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் விதத்தில், தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் விலைப் பட்டியலுடன் ‘ஜிஎஸ்டி’ (GST) குறித்த தகவல்கள் அடங்கிய சிட்டையையும் இணைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அமல்படுத்தப்பட உள்ள பொருள்சேவை வரி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, டெஸ்கோ நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Tesco

#TamilSchoolmychoice

 

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் பிஷேர் கூறுகையில், “எங்கள் நிறுவனம், பொருள்சேவை வரியை மேம்படுத்த சுமார் 3 மில்லியன் ரிங்கிட் வரை செலவழித்துள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களிடம் ஜிஎஸ்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டோம். குறிப்பாக, பொருட்களை ஜிஎஸ்டிக்கு தகுந்தபடி வகைப்படுத்தினோம். மேலும், ரசீதுகளில் ஜிஎஸ்டி இல்லாத பொருட்களையும் குறிப்பிட உள்ளோம்.”

“ஜிஎஸ்டி குறித்து வாடிக்கையாளர்களுக்கு அச்சம் இருப்பது மறுக்க முடியாத உண்மை. எங்கள் நிறுவனம் எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும், சிறந்த சேவையினை கொடுக்க முயற்சிக்கும்”என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “எங்கள் நிறுவனம் ஜிஎஸ்டி குறித்த தகவல்களை அளிக்க சிறப்பு சேவை மையம் ஒன்றையும், இணையத் தளம் ஒன்றையும் உருவாக்கி உள்ளோம். மற்ற நாடுகளில் எங்கள் நிறுவனம் ஏற்றுக் கொண்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகள் பற்றி ஆராய்ந்துள்ளோம். அதனால், இந்த முறையை மேம்படுத்துவதில் எங்களுக்கு சிக்கல் ஏதும் இருக்காது. இதுவரை மலேசியாவில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள எங்கள் நிறுவனம், சிறந்த சேவை வழங்குவதன் மூலம் அதனை மேலும் அதிகரிக்க முயற்சிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்