Home நாடு “தை பிறந்தால் வழி பிறக்கும்” – பிரதமரின் பொங்கல் வாழ்த்து

“தை பிறந்தால் வழி பிறக்கும்” – பிரதமரின் பொங்கல் வாழ்த்து

622
0
SHARE
Ad

Najib Tun Razakபுத்ராஜெயா, ஜனவரி 16 – பொங்கல் திருநாளை முன்னிட்டு மலேசிய இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்.

அவரது வாழ்த்துச் செய்தியில், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று மலேசிய இந்தியர்கள் அடிக்கடி குறிப்பிடுவதை தாம் நன்கு அறிந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

அறுவடை மாதமான தை மாதம் பிறந்தால் புதிய நம்பிக்கையுடன் கூடிய வாழ்க்கை பிறக்கும் என்கிற நம்பிக்கையும் என்று மலேசிய இந்தியர்கள், கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“தை மாதம் பிறந்தாலே வாழ்க்கைக்கு முழு உத்தரவாதம் கிடைக்கும் என்று மலேசிய இந்தியர்கள் நம்புகிறார்கள். எனவே நாடு முழுவதும் உள்ள மலேசிய இந்தியர்கள் பொங்கல் பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அரசாங்கத்திற்கும் தங்களுக்கும் இடையிலான நம்பிக்கை மேலும் வலுப்பெற பாடுபட வேண்டும்,” என பிரதமர் நஜிப் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.

இந்தியர்களின் வாழ்க்கையில் முன்னேற்றகரமான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும் என்றும் நஜிப் தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் உறுதி கூறியுள்ளார்.