Home நாடு ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் உடற்பகுதி கண்டறிப்பட்டது!

ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் உடற்பகுதி கண்டறிப்பட்டது!

525
0
SHARE
Ad

ஜகார்த்தா, ஜனவரி 16 – ஜாவா கடலில் விபத்திற்குள்ளான ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் உடல் பகுதி கிடந்த இடத்தை நேற்று கடற்படையைச் சேர்ந்த படகு கண்டறிந்ததைத் தொடர்ந்து, முக்குளிப்பாளர்கள் அதை மீட்டெடுக்க முயற்சிகள் செய்து வருகின்றனர்.

Rescue Operation of the Crashed AirAsia Flight QZ 8501

 

#TamilSchoolmychoice

(நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் ஆழ்கடலில் எடுக்கப்பட்டுள்ள விமானத்தின் படங்கள்)

ஆழ்கடலில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களில், ஏர் ஆசியாவில் உடற்படுதியில் எழுப்பட்டிருக்கும் “Now Everyone Can Fly” என்ற வாசகத்தை கண்டறிந்துள்ளனர்.

அது விமானத்தின் நடுப்பகுதியாக இருக்கக்கூடும் என்றும், அதை மீட்டால் அதிலிருந்து நிறைய பயணிகளின் சடலங்களை மீட்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.

தற்போது கடலில் அடித்தட்டில் இருக்கும் விமானத்தின் உடற்பகுதியின் உள்ளே எத்தனை பயணிகளின் சடலங்கள் உள்ளன என்பதை அறிய சுமார் 15 முக்குளிப்பாளர்கள் இறங்கியுள்ளனர்.

பின்னர், இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட முக்குளிப்பு வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என மீட்புக் குழுவின் தலைவர் சுப்ரியாடி தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவின் சுரபயாவிலிருந்து கடந்த டிசம்பர் 28-ந் தேதி சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஆசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியானார்கள்.

கடந்த 17 நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில், இது வரை 48 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத்தின் இரண்டு கறுப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.