புதுடெல்லி, ஜனவரி 17 – திருவள்ளுவரின் சிந்தனை, எழுத்துக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அந்நூல் குஜராத் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தினத்தையொட்டி, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நூலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மத்திய செம்மொழி நிறுவனத்தின் இயக்குநர் பூமா உள்பட பலர் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் மோடி வெளியிட்ட ஒரு அறிக்கையில், ”திருவள்ளுவரின் சிந்தனைக்கும், எழுத்துக்கும் தான் தலை வணங்குவதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும், “திருக்குறளில் இடம்பெற்றுள்ள கருத்துகள் எந்தக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருப்பதால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும், அந்த நூல் உலகப் பொதுமறையாக திகழ்வதாக” மோடி கூறியுள்ளார்.
திருக்குறள், எந்தவொரு நாட்டையோ, மொழியையோ, இனத்தையோ அல்லது சமூகத்தையோ குறிப்பிடாததும், அது உலகப் பொதுமறையாக போற்றப்படுவதற்கு முக்கிய காரணமாகும்” என்றும் புகழாரம் சூட்டி உள்ளார் மோடி.