Home நாடு “25 கோயில்களை இடித்த பகுதியில் மீண்டும் 1 இந்து கோயில்” – ராமசாமி கருத்து

“25 கோயில்களை இடித்த பகுதியில் மீண்டும் 1 இந்து கோயில்” – ராமசாமி கருத்து

574
0
SHARE
Ad

Ramasamy (500x281)கோலாலம்பூர், ஜனவரி 20 – புத்ராஜெயாவில் 12 மில்லியன் செலவில் கட்டப்பட்டுவரும், சுமார் 80 சதவிகிதம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த இந்து கோயிலுக்கு பெர்காசா எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து பினாங்கு துணை முதல்வர் ராமசாமி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெர்காசாவின் எதிர்ப்பு குறித்து கடும் விமர்சனம் செய்துள்ள கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், கடந்த 2013-ம் ஆண்டு ஜாலான் பி.ரம்லியில் ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் ஆலயம் இடிக்கப்பட்டதற்கும் அவரே பொறுப்பாளி ஆவார்” என்று ராமசாமி தெரிவித்துள்ளார்.

மேலும்,  “அரசாங்கத்தின் தலைமையிடமாக புத்ராஜெயாவை அமைப்பதற்காக பிராங்கு பெசார், செட்ஜெலி, கேலோவே, மெடிங்லே மற்றும் தோட்டப்புறங்கள் ஆகியவற்றில் இருந்த 25 இந்து கோயில்கள் மற்றும் 100-க்கும் அதிகமாக புனித ஸ்தலங்கள்இடிக்கப்பட்டதோடு, அப்பகுதியில் வாழ்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் முறையான இழப்பீடு கொடுக்கப்படாமல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்”

#TamilSchoolmychoice

“அரசாங்கம் 25 கோயில்களை அழித்த பின்னர், தற்போது டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு அவர்களால் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 1 கோயிலை கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது”

“இடிக்கப்பட்ட 25 -க்கும் மேற்பட்ட கோயில்களில் சில பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ அறிவிக்கும் அளவிற்கு பழமை வாய்ந்தவை. இந்த அளவிற்கு இந்திய சமுதாயத்தின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டின் செயலுக்கு தற்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மன்னிப்பு கேட்பாரா?” என்று ராமாசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.