இந்தப் படத்தின் பாடல்கள் இன்று மாலை 6.00 மணிக்கு மும்பையில் வெளியாகின்றன. இந்த நிகழ்ச்சியை இளையராஜாவுக்கான பாராட்டு விழாவாக நடத்த முடிவு செய்த இயக்குநர் பால்கி, அதற்கான ஏற்பாடுகளை கடந்த சில தினங்களாகச் செய்து வந்தார்.
அமிதாப் பச்சன் தலைமையில் இந்த விழா நடக்கிறது. இந்த விழாவில் இளையராஜா பங்கேற்று ஷமிதாப் பட பாடல்களை நேரடி கச்சேரியாக நடத்துகிறார். இளையராஜாவின் பிற பாடல்களும் இந்த கச்சேரியில் பாடப்படுகின்றன.
அமிதாப் பச்சனும் இந்த நிகழ்ச்சியில் பாடுகிறார். இந்த விழாவில் மும்பையைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர்கள், பாடகர்கள் பங்கேற்கின்றனர். லதா மங்கேஷ்கர், ஆஷா பான்ஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இன்று மாலை 6.00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் அமிதாப், தனுஷ் ஆகியோர் பாடுவதை முன் வரிசையில் அமர்ந்து ரசிக்கப் போகிறாராம் ரஜினிகாந்த். இந்நிகழ்ச்சியில் கமல் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.