Home நாடு ஏர் ஆசியா QZ8501: விபத்திற்கு முன்பாக ‘எச்சரிக்கை மணிகள்’ ஒலித்துள்ளன!

ஏர் ஆசியா QZ8501: விபத்திற்கு முன்பாக ‘எச்சரிக்கை மணிகள்’ ஒலித்துள்ளன!

612
0
SHARE
Ad

Ignasius Jonanஜகார்த்தா, ஜனவரி 22 – ஜாவா கடலில் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பாக விமானத்தில் இருந்த ‘எச்சரிக்கை’ மணிகள் ஒலித்துள்ளன என்றும், விமானி அதனைக் கட்டுப்படுத்தி விமானத்தை சரிசெய்ய முயற்சி செய்திருக்கிறார் என்றும் ஏர் ஆசியா QZ8501  விமான விபத்தை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“பெரும்பாலான எச்சரிக்கை மணிகள் ஒலித்துள்ளன. விமானியும், துணைவிமானியும் அதனை சரி செய்ய முயற்சி செய்துள்ளதும் பதிவாகியுள்ளது. என்றாலும், ஒலிகளுக்கு நடுவில் விமானிகள் பேசிக் கொண்ட குரல் பதிவு சரியாக கேட்கவில்லை” என தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நேற்று இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் இக்னாசியஸ் ஜோனன் வெளியிட்ட அறிக்கையில், கடைசி நிமிடங்களில் விமானம் அதிவேகமாகப் பறந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் கறுப்புப் பெட்டியை, விசாரணை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்னும் ஓரிரு வாரங்களில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துறையிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள முதற்கட்ட விசாரணை அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப் போவதில்லை என்றும் இக்னாசியஸ் அறிவித்துள்ளார்.