Home இந்தியா இன்று பாஜகவில் இணைகிறார் நடிகர் சுரேஷ் கோபி!

இன்று பாஜகவில் இணைகிறார் நடிகர் சுரேஷ் கோபி!

701
0
SHARE
Ad

suresh-gopiதிருவனந்தபுரம், ஜனவரி 24 – மலையாள பட உலகில் முன்னணி நடிகர் சுரேஷ்கோபி பாஜகவில் இன்று சேருகிறார். தமிழில் தீனா, சமஸ்தானம், ‘ஐ’ உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் பல படங்களிலும் நடித்துள்ளவர் சுரேஷ் கோபி.

சமீபகாலமாக சுரேஷ்கோபி பாரதீய ஜனதாவில் சேரப்போவதாக கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில் சுரேஷ்கோபி பாரதீய ஜனதாவில் இணைய உள்ளதை கேரள மாநில பாரதீய ஜனதா தலைவர் முரளிதரன் உறுதிபடுத்தி உள்ளார்.

இதுபற்றி கோட்டையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கேரள பா.ஜ.க. மாநில தலைவர் முரளிதரன், “பாரதீய ஜனதாவைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவர் சுரேஷ் கோபியை பாரதீய ஜனதாவில் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்”.

#TamilSchoolmychoice

suresh gopi-modi“சரியான நேரத்தில் தனது முடிவை தெரிவிப்பதாக அவரிடம் சுரேஷ் கோபி உறுதி அளித்துள்ளார். பாரதீய ஜனதாவில் இணையுமாறு சுரேஷ்கோபிக்கு அதிகார பூர்வமாக அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது,” என்றார்.

இதைத் தொடர்ந்து இன்று சுரேஷ் கோபி பாஜகவில் இணைகிறார். தமிழகத்தில் நடிகர் நெப்போலியன் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். ஆந்திராவிலும் முன்னணி நடிகர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.