ஜகார்த்தா, ஜனவரி 24 – ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிக் கிடக்கும் ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் நடுப்பகுதியை முக்குளிப்பு வீரர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கடின முயற்சிகளுக்குப் பிறகு அடைந்தனர்.
ஆனால், விமானத்தின் சேதமடைந்த பல சிறிய பாகங்களும், கேபிள்களும் தடையாக இருப்பதால் அதனுள் அவர்களால் செல்ல இயலவில்லை என்று கூறப்படுகின்றது.
என்றாலும், நடுப்பகுதியின் உள்ளே மேலும் 4 சடலங்கள் இருப்பதை முக்குளிப்பு வீரர்கள் கண்டறிந்துள்ளனர். சடலங்களையும், விமானத்தின் நடுப்பகுதியையும் மீட்பதற்கான முயற்சிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த தகவலை நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவின் தலைவர் எஸ்.பி சுப்ரியாடி தெரிவித்துள்ளார்.
162 பயணிகளுடன் கடந்த டிசம்பர் 28-ம் தேதி விபத்திற்குள்ளான இந்த விமானத்தில் இருந்து, இதுவரை நேற்று கண்டறியப்பட்ட 4 சடலங்களோடு சேர்த்து மொத்தம் 63 சடலங்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.