கோலாலம்பூர், ஜனவரி 29 – கடந்த 2013-ம் ஆண்டு விசாரணைக் கைதி கருணாநிதி தடுப்புக் காவலில் இறந்ததற்குக் காரணம் அவர் உடம்பில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் தான் என்று சிரம்பான் மரணம் தொடர்பான விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தடுப்புக் காவலில் இருந்த கருணாநிதி தாக்கப்பட்டதற்கும், அவருக்கு உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததற்கும் காவல்துறையின் மெத்தனப் போக்குதான் காரணம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2013-ம் ஆண்டு, மே 29-ம் தேதி மனைவியுடன் தகராறு செய்தார் என்ற புகாரின் அடிப்படையில் கருணாநிதி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஜூன் 1-ம் தேதி, தடுப்புக்காவலில் மர்மமான முறையில் கருணாநிதி இறந்தார்.
கல்லீரல் வீக்கம் காரணமாக அவர் இறந்து போனார் என பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.