Home நாடு துப்பாக்கி விவகாரம்: சரவணனிடம் காவல்துறை விசாரணை!

துப்பாக்கி விவகாரம்: சரவணனிடம் காவல்துறை விசாரணை!

648
0
SHARE
Ad

m.saravanan1-may7கோலாலம்பூர்,பிப்ரவரி 2 – மஇகா உதவித் தலைவரும் துணை அமைச்சருமான டத்தோ சரவணன் தனது இடுப்பில் துப்பாக்கி வைத்திருப்பதை காட்டும் புகைப்படம் அண்மையில் நட்பு ஊடகங்களில் வெளியாகின. இது தொடர்பாக அவரிடம் காவல்துறை விசாரணை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

கடந்த புதன்கிழமை மஇகா தலைமையகத்தில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படம் ஃபேஸ்புக் நட்பு ஊடகத்தில் மிக வேகமாக பலரால் பகிரப்பட்டது.

இது குறித்து சரவணனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து தாம் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும் சரவணனின் நடவடிக்கை குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ தாஜுடின் முகமட் ஈசா தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

“தனிப்பட்ட காரணங்களுக்காக உரிமம் பெறப்பட்ட துப்பாக்கியை பொதுவில் காட்டுவது அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். தவிர ஒருமுறை தனது துப்பாக்கியை தனது வாகனத்திலேயே வைத்துச் சென்றதாக சரவணன் கூறியுள்ளார். இந்த பொறுப்பற்ற செயல் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்படக்கூடும். எனினும் அவர் மீது இதுவரை அச்சுறுத்தல் புகார் ஏதும் வரவில்லை,” என தாஜுடின் கூறியுள்ளார்.