Home நாடு ராமசாமி நியமனத்தால் தேசிய முன்னணிக்குப் பாதிப்பில்லை – ஸம்ரி அப்துல் காதிர்

ராமசாமி நியமனத்தால் தேசிய முன்னணிக்குப் பாதிப்பில்லை – ஸம்ரி அப்துல் காதிர்

562
0
SHARE
Ad

zamri kaderஈப்போ, பிப்ரவரி 2 – பேரா மாநில மஇகா தொடர்புக்குழுவின் தலைவர் பதவிக்கு டான்ஸ்ரீ ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளதால் பேரா மாநில தேசிய முன்னணிக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லை என அம்மாநில மந்திரிபெசார் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதிர் கூறியுள்ளார்.

டத்தோஸ்ரீ பழனிவேலுக்குப் பதிலாக பேரா மாநில மஇகா தலைவராக ராமசாமி நியமிக்கப்பட்டது மஇகாவின் சொந்த முடிவு என்றார் அவர்.

“எந்தவொரு அரசியல் கட்சியிலும் சாதக, பாதக அம்சங்கள் இருக்கவே செய்யும். எனினும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி தீர்வு காண வேண்டும்,” என பேரா மாநில தேசிய முன்னணியின் தலைவருமான ஸாம்ரி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

புதிய நியமனங்கள் என்பன மஇகாவின் உட்கட்சி விவகாரம் என்று குறிப்பிட்ட அவர், அது தங்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றார்.

அண்மையில் மஇகாவில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், தஞ்சோங் மாலிம் மஇகா தொகுதி தலைவரான டான்ஸ்ரீ ராமசாமியை பேரா மாநில தலைவராக பழனிவேல் நியமித்துள்ளார்.