Home நாடு ஜோர்டான் விமானி உயிருடன் எரித்துக் கொலை: மலேசிய அரசு கடும் கண்டனம்

ஜோர்டான் விமானி உயிருடன் எரித்துக் கொலை: மலேசிய அரசு கடும் கண்டனம்

707
0
SHARE
Ad

anifah aman4பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 6 – பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட ஜோர்டான் விமானியை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிருடன் தீ வைத்து கொன்றது கொடூரமான, மனிதாபிமற்ற செயல் என மலேசிய வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஜோர்டானிய விமானி உயிருடன் கொளுத்தப்பட்ட காட்சி தமக்கு மிகுந்த அதிர்ச்சியை தந்திருப்பதாக அமைச்சர் டத்தோஸ்ரீ அனிபா அமான் தெரிவித்துள்ளார்.

“இந்த ஈவு இரக்கமற்ற படுகொலையானது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூரமான, மனிதாபிமானமற்ற செயல்பாடுகளுக்கு சான்றாக அமைந்துள்ளது.ஜோர்டான் அரசு மற்றும் அந்நாட்டு மக்களுடன் இணைந்து இச்சோதனையான தருணத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு மலேசியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது,” என்று அனிபா அமான் மேலும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஜோர்டானிய அரசுக்கும், கொல்லப்பட்ட விமானியின் குடும்பத்திற்கும் மலேசிய அரசு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 24ஆம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டார் ஜோர்டான் விமானி அல் காசேஸ்பெக். இந்நிலையில் அவர் உயிருடன் எரித்துக் கொல்லப்படும் காணொளிக் காட்சியை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.