Home இந்தியா டெல்லியில் ஆம் ஆத்மி முன்னிலை: மீண்டும் முதல்வராகிறார் கெஜ்ரிவால்!

டெல்லியில் ஆம் ஆத்மி முன்னிலை: மீண்டும் முதல்வராகிறார் கெஜ்ரிவால்!

626
0
SHARE
Ad

app புதுடெல்லி, பிப்ரவரி 10 – டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராகிறார். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி பெரும்பான்மை இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி முக்கிய தலைவர்களும் வெற்றி முகத்தில் உள்ளனர்.

டெல்லி தேர்தலில் முன்னிலை பெறுவதை அடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். கட்சி அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

கெஜ்ரிவால்(ஆம் ஆத்மி)-53, கிரண் பேடி (பாஜக)-12, அஜய் மக்கான் (காங்)-1  முன்னிலையில் உள்ளது. சதர் பஜார் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அஜய் மக்கான் பின்னடைவை சந்தித்துள்ளார். சதர் பஜார் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சோம் தத் முன்னிலையில் உள்ளார்.

#TamilSchoolmychoice

பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி பின்னடைவு:

கிருஷ்ணா நகர் தொகுதியில் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி பின்னடைவை சந்தித்துள்ளார். ஆம் ஆத்மி வேட்பாளரை விட 242 ஓட்டுகள் குறைவாக பெற்று பின்தங்கியுள்ளார்.

வெற்றி தோல்வியை எதிர்நோக்கி 673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான வாக்குப் பதிவு கடந்த 7-ம் தேதி நடந்தது. இதில், 67.14 சதவீத வாக்குகள்  பதிவாகின.

Untitledடெல்லி சட்டப் பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவாகும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மி  முன்னிலையில் உள்ளது. அக்கட்சி அதிகபட்சமாக 53 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதேபோல் பாஜ 34 &-38 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளை கைப்பற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டன.

சட்டப்பேரவை தேர்தலில் முன்னிலை நிலவரம் பகல் 10 மணியளவில் தெரியவரும். மொத்தம் 14 மையங்ளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சந்திர பூஷண் குமார் கூறியதாவது:

“வாக்கு எண்ணும்  மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடைமுறைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது”.

“ஒவ்வொரு சுற்றின் முடிவுகளும் வாக்கு எண்ணும்  மையத்தின் வெளியே பொருத்தப்பட்டுள்ள தகவல் பலகையில் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என் அவர் கூறினார்.