Home உலகம் டோனி அபாட் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி!

டோனி அபாட் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி!

515
0
SHARE
Ad

ausகான்பெர்ரா, பிப்ரவரி 10 – ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. வெற்றி பெற்ற அபாட் தனது பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சி சார்பில் பிரதமர் பதவி வகித்து வரும் டோனி அப்போட்டிற்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதனால் அவருக்கு எதிராக மேற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் லூக் சிம்கின்ஸ், கடந்த வாரம் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது நேற்று ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

கான்பெர்ராவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த ஓட்டெடுப்பில், டோனி அபாட்டிற்கு ஆதரவாக 61 பேர் வாக்களித்தனர். அவருக்கு எதிராக 39 வாக்குகளே பதிவு செய்யப்பட்டன.

இந்த தகவலை லிபரல் கட்சித் தலைவர் பிலிப் ரட்டோக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் டோனி அப்போட் தோல்வியுற்றால், அவரது இடத்துக்கு தகவல் தொடர்பு அமைச்சர் டர்ன் புல் வரக்கூடும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.