Home நாடு பெர்மாத்தாங் பாவ் காலியிடம் குறித்து விரைவில் அறிவிப்பு – தேர்தல் ஆணையம்

பெர்மாத்தாங் பாவ் காலியிடம் குறித்து விரைவில் அறிவிப்பு – தேர்தல் ஆணையம்

552
0
SHARE
Ad

Tan-Sri-Abdul-Aziz-Mohd-Yusof2கோலாலம்பூர், பிப்ரவரி 11 – நாடாளுமன்ற சபாநாயகரின் உத்தரவு கிடைத்தவுடன் பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் காலியிடத்திற்கான அறிவிப்பை வெளியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காலியிட அறிவிப்பு வெளியான அடுத்த 10 நாட்களில் இடைத்தேர்தல் நடக்கும் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அசிஸ் முகமட் யூசோப் தெரிவித்துள்ளார்.

பெர்மாத்தாங் பாவ் தொகுதியின்  நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஓரினப்புணர்ச்சி வழக்கில் நேற்று 5 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கும் தகுதியை இயல்பாகவே இழந்தார்.

#TamilSchoolmychoice

கூட்டரசு தொகுதி 48 (1) இ என்ற சட்டப்பிரிவின் படி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிப்பவர் 1 வருடத்திற்கு மேல் சிறை தண்டனை பெற்றாலோ அலல்து 2000 ரிங்கிட்டிற்கு மேல் அபராதம் செலுத்தினாலோ தானாகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கும் தகுதியை இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.