Home உலகம் ஜி20 மாநாடு:கறுப்புப் பணத்தை ஒழிக்க புதிய முறை – இந்தியா வலியுறுத்தல்!

ஜி20 மாநாடு:கறுப்புப் பணத்தை ஒழிக்க புதிய முறை – இந்தியா வலியுறுத்தல்!

763
0
SHARE
Ad

g20இஸ்தான்புல், பிப்ரவரி 13 – கறுப்புப் பணத்தை ஒழிக்க தானியங்கி தகவல் பரிமாற்ற முறையை அனைத்து நாடுகளும் செயல்படுத்த வேண்டும் என ஜி20 நாடுகளின் மாநாட்டில் இந்தியா சார்பாக வலியுறுத்தப்பட்டது.

சமீபத்தில் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் கலந்துகொண்ட மாநாடு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இந்தியா சார்பாக  இந்திய நிதி இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கலந்து கொண்டார்.

அப்போது வெளிநாட்டில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பதுக்கப்படுவதை தடுப்பது பற்றி அவர் கூறியதாவது-: “வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கி வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது”.

#TamilSchoolmychoice

“இதைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும். உலக நாடுகள் தானியங்கி தகவல் பரிமாற்ற முறையை செயல்படுத்த வேண்டும்.”

“இதன் மூலம் சட்டத்திற்கு புறம்பாக வரி ஏய்ப்பு செய்து பணம் ஈட்டுவது மற்றும் பதுக்கி வைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களை மிக எளிதாக அடையாளம் காண முடியும்”.

“இன்று பல்வேறு நாடுகள் வேறு வேறு பொருளாதார, வரிக் கொள்கைகளைக் கொண்டுள்ளன. இதன் மூலம் கறுப்புப் பணம் பதுக்கும் ஒருவரைப் பற்றிய விவரங்களை அறியவது கடினமாகிறது.”

Adsız“இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு அனைத்துலக நிதியம் போன்ற அமைப்புகளில் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். இந்த நிதியத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வர 2010-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.”

“அவ்வாறு இதனை நடைமுறைப்படுத்தினால், அனைத்துலக நிதியத்தில் இந்தியாவின் வாக்களிக்கும் விகிதா சாரம் 2.44 சதவீதத்தில் இருந்து 2.75 சதவீதமாக உயரும்”.

“இதன் மூலம் அதிக அளவு ஒதுக்கீடு கொண்ட 11-வது நாடு எனும் நிலையில் இருந்து 8-வது இடத்துக்கு இந்தியா முன்னேறும்” என்று அவர் கூறியுள்ளார்.

கறுப்புப் பணம் பதுக்குவதை தடுப்பது பற்றிய இந்தியாவின் யோசனையை உலக நாடுகள் பல ஆதரித்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.