Home இந்தியா அமெரிக்கா சென்ற இந்தியரை போலீசார் தாக்கி கவலைக்கிடம் – இந்தியா கடும் கண்டனம்!

அமெரிக்கா சென்ற இந்தியரை போலீசார் தாக்கி கவலைக்கிடம் – இந்தியா கடும் கண்டனம்!

607
0
SHARE
Ad

Indian-citizenபுதுடெல்லி, பிப்ரவரி 13 – மகனை பார்க்க அமெரிக்கா சென்ற நபரை, சந்தேகத்தின் பேரில் பிடித்த போலீசார் சரமாரியாக தாக்கினர். இதனால் முதுகெலும்பு பகுதியில் பலத்த காயம் அடைந்த அவர் உணர்வற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர் சுரேஷ்பாய் படேல்(57). இவரது மகன் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் தங்கி பணியாற்றி வருகிறார்.

மகனை பார்க்கவும், சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் படேல் அமெரிக்கா சென்றார். மகன் வீட்டில் தங்கியிருந்த படேல் அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள வீடுகளின் வாகனப் பகுதியை உற்றுப் பார்த்தபடி சென்றுள்ளார்.

#TamilSchoolmychoice

இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சுரேஷ்பாய் படேலை மடக்கி விசாரித்தனர். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால், போலீசாரின் கேள்விக்கு பதில் அளிக்க தெரியவில்லை.

‘நோ இங்கிலீஷ்’ என்று மட்டுமே கூறியுள்ளார். மேலும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், வாக்கிங் என்று மட்டும் ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.

அப்போது, அவர் கைத்துப்பாக்கியை எடுக்க முயல்கிறார் என சந்தேகம் அடைந்த போலீசார் படேல் மீது பாய்ந்து, அவரது கையை மடக்கி கீழே தள்ளினர்.

Indian-citizen-out-for-a-walk-left-paralyzed-by-Alabama_SECVPFஇதில் படேலின் முகம் தரையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. அவர் அப்படியே மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்து பார்த்தபோது அவரது முதுகெலும்பு பகுதியில் பலத்த அடிபட்டது.

மார்பெலும்புகள் நொறுங்கியிருந்தன. இச்சம்பவத்தை கேள்விப்பட்டு படேல் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்.

இந்திய அமெரிக்க சங்கமும்,  மத்திய அரசும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை வரவழைத்து இந்தியா தனது கவலையை தெரிவித்தது.

இது தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை விவரங்களை தெரிவிக்கும்படி இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பரூதீன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை அளித்து வருகின்றனர்.