Home உலகம் சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு புற்றுநோய் – பரிசோதனையில் உறுதி

சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு புற்றுநோய் – பரிசோதனையில் உறுதி

754
0
SHARE
Ad

சிங்கப்பூர், பிப்ரவரி 15 – சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) (ஆண்களுக்கு விரையில் வரும் ஒரு வகையான புற்றுநோய்) இருப்பது பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காக அவருக்கு நாளை (திங்கட்கிழமை) சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு புரோஸ்டேட் சுரப்பி அகற்றப்படவுள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் துறை அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

10968578_857415417654499_6724019498307274906_n(சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் பிரதமர் லீ சியான் லூங், தனது நலனுக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் தனது நன்றி தெரிவிப்பதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்)

#TamilSchoolmychoice

கடந்த ஜனவரி மாதம், லீ சியான் லூங்கிற்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டபோது, புற்றுநோய்கான செல்கள் இருப்பதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சந்தேகமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவரது உடம்பிலிருந்து அதன் சம்பந்தப்பட்ட செல்களின் 38 மாதிரிகளை எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை தற்போது உறுதி செய்துள்ளனர்.

புரோஸ்டேட் புற்றுநோய் என்பது விரைப்பையில் ஏற்படும் ஒருவகையான புற்றுநோய். வயதான ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய இந்த நோய், சிங்கப்பூர் ஆண்களில் பெரும்பாலோனோருக்குத் தாக்கும் புற்றுநோய்களில் மூன்றாவதாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த பிப்ரவரி 10-ம் தேதியோடு, லீ சியான் லூங் 63 வயது நிறைவடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.